அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதது சுப்ரீம் கோர்ட்..

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இபிஎஸ் மற்றும் கட்சியினுடைய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் அதிமுக கட்சி என்ற 3 தரப்பிலும் இன்று வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வாதங்கள் இன்றைய தினம் நிறைவடைந்த நிலையில், வாதங்களுக்கு எல்லாம் பதில் அளிக்கக் கூடிய வகையில் ஓபிஎஸ் தரப்பில் பதில் வாதமானது வைக்கப்பட்டது. இதெல்லாம் முடிவடைந்த பின்னர் இந்த வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமைக்குள் (16ஆம் தேதி) தங்களது எழுத்து பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தநிலையில், தொடர்ந்து வாதங்களானது நடைபெற்று வந்த நிலையில், வழக்கினுடைய தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பினார்கள்.

குறிப்பாக நீதிபதிகளை பொறுத்தவரை ஜூன் மாதம் 23ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் சரியானதுதானா என கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் தரப்பு கூட்டம் ஓரளவு சரியானது தான் என்றாலும் கூட அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள், கையாளப்பட்ட வழிமுறைகள் அனைத்தும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அப்படியென்றால் அதிலிருந்து தான் அனைத்து பிரச்சினைகளும் தொடங்கியதா என நீதிபதிகள் கேள்வி எழுப்ப அதற்கு ஆம் என்று ஓபிஎஸ் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது. என்னை நீக்கும் முன் விளக்கம் கேட்டு எந்த நோட்டீசும் வழங்கவில்லை. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற விவகாரம் தான் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. கட்சி நலனுக்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தொடர வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

மேலும் அதிமுக தொடர்பான உட்கட்சி விவகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களிலேயே இருந்தால் கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இரண்டு பதவிகளில் ஒரு பதவியில் இருப்பவருக்கு அதில் தொடரவிருப்பமில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. அதுமட்டுமில்லாமல் 23.6. 2022 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் சரியானது என்று கூறினால், ஓபிஎஸ் தரப்பு சரியானது என்று கூறினால் அன்றைய தினம் அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு தேதி குறிப்பிட்டதும் சரியானது  தானே என நீதிபதியின் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்வி மிகவும் முக்கியமானது, ஏனென்றால் பொதுக்குழு கூட்டத்திற்கு உரிய முறையில் நோட்டீஸ் அளிக்கப்படாமலேயே ஜூலை மாதம் 11-ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இபிஎஸ் தரப்பை பொறுத்தவரைக்கும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என நாங்கள் அறிவித்துவிட்டோம். எனவே அதனை நோட்டீஸ் ஆக கருத வேண்டும் என ஈபிஎஸ்  தரப்பு தொடர்ந்து சொல்லி வரக்கூடிய நிலையில், இந்த ஒரு கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளது. மேலும் அனைத்து தரப்பும் எழுத்துபூர்வ வாதங்களை திங்கட்கிழமைக்குள் தங்களது வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினுடைய தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.