உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், ஒரு சிறிய கவனக்குறைவு ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தையே மருத்துவமனையில் சேர்த்துள்ளது. தனது இரு குழந்தைகளை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய், அங்கு சென்றதும் வண்டியை நிறுத்தினார். ஆனால், வண்டியின் இன்ஜினை அவர் அணைக்கவில்லை. வண்டியின் முன் பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராத விதமாக வேகத்தைக் கூட்டும் ‘எக்ஸலரேட்டரை’ (Accelerator) திடீரென முழுமையாக முறுக்கினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டி கட்டுக்கடங்காத வேகத்தில் சீறிப் பாய்ந்து, முன்னால் இருந்த கான்கிரீட் சுவரில் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் அந்தத் தாயும், இரு குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தாய்க்குத் தலையிலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டு, நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
बेहद ही भयावह हादसा है.
ये महिला अपने बच्चों को स्कूटी से स्कूल लेकर गई थी. स्कूटी रोककर एक बच्चे को उतारा. तभी आगे खड़े बच्चे ने एक्सीलेटर खिंच गया और स्कूटी सामने दीवार से जाकर भिड़ गई. वीडियो यूपी के मुजफ्फरनगर की है. pic.twitter.com/fisHW2QW2z
— Priya singh (@priyarajputlive) February 11, 2026
இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. “குழந்தைகளை முன் பகுதியில் நிக்க வைத்து வண்டி ஓட்டுபவர்கள், வண்டியை நிறுத்தியதும் மறக்காமல் இன்ஜினை ஆஃப் செய்ய வேண்டும்” என்பதற்கு இந்த விபத்து ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
