தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆனது இன்று ஆளுநர் உரையோடு காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழக அரசின் உரையில் உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் இருந்த காரணத்தால் வாசிக்க மறுப்பு தெரிவித்து இரண்டு நிமிடத்திலேயே ஆளுநர் அவருடைய உரையை முடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்துள்ளார். அதாவது பணம் வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், காலை சிற்றுண்டி திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்ட இலவச பேருந்து திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் அனைத்தும் முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 22 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.