சத்தீஸ்கர் மாநிலம் டோன்கர்கர் நகரில்  பாமலேஸ்வரி பிரசித்தி பெற்ற என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை மாலையில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கமான நிலையில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த LED திரையில் ஆபாச வீடியோ ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது.

இதனால் குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் வந்த பக்தர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கோவில் அறக்கட்டளையின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.