உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரத்தில் மே 8 ஆம் தேதி ஏற்பட்ட கடத்தல் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கபில் வளாகம் அருகே, ஒரு இளைஞர் நான்கைந்து பேரால் அடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்துச் செல்லப்படுவது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளிவந்த பின்னரே சம்பவம் குறித்து காவல்துறை நடவடிக்கைக்கு எடுத்தது. இந்த வீடியோ வைரலான பிறகு விசாரணை தீவிரமாக்கப்பட்டது.

 

இந்த சம்பத்தில் தாக்கப்பட்டவர் உ.பி.யின் சித்ரகூடில் இருந்து மீட்கப்பட்ட 27 வயதான துஷார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது ஹல்த்வானி காவல் வட்ட அதிகாரி நிதின் லோஹானி தெரிவித்ததாவது, இது ஒரு பரஸ்பர பரிவர்த்தனை தொடர்புடைய சம்பவமாகத் தோன்றுகிறது என கூறினார். இருப்பினும் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம், நோக்கம் ஆகியவை இதுவரை போலீசால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.