விளைப் பொருள்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்து இருக்கிறது மோடி அரசு. பருத்தி, சோளம் மற்றும் பருப்பு ஆகிய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ளார்.