தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் சௌகரியமாக பயணம் செய்யலாம் என்பதால் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தனியார் உணவு விற்பனை நிலையங்கள் மூலமாக உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக வெளியில் வாங்கும் உணவுகளை விட ரயில் நிலையங்களில் வாங்கும் உணவுகளின் விலை குறைவாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது ஜனவரி 16ஆம் தேதி முதல் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் சமையல் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த விலை ஏற்றம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் வழக்கமாக விற்பனை செய்யப்படும் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது.

மற்ற உணவு பொருட்களின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்னி சாம்பாருடன் இரண்டு இட்லிகள் 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 20 ரூபாய்க்கும் , மசால் தோசை 16 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், மெதுவடை, மசால் வடை, ஆனியன் தோசை, ஊத்தாப்பம்,வெங்காய பக்கோடா மற்றும் ரவை உப்புமா ஆகியவற்றின் விலை 17 ரூபாய் இல் இருந்து 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.