2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 23 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காகிதம் இல்லா இ- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவு செய்யும். கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை சங்கமம் கலைவிழா மேலும் எட்டு நகரங்களில் நடத்தப்படும் தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.  216 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவ திட்டம் விரிவுபடுத்தப்படும் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜனுக்கு நினைவிடம் அமைக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட 233 கோடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு 223 கோடியில் புதிய வீடுகள் கட்டப்படும். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.