முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ மற்றும் எம்சிஏ பயில தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு தகுதி பெற வேண்டும்.

2023-24 ஆம் கல்வியாண்டு எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறும். எனவே மாணவர்கள் இதனை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.