2024 ஆம் ஆண்டு 17 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 22ஆம் தேதி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகின்றன. நாளை போட்டி தொடங்க உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டி தொடக்கத்தை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை இன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெல்ஸ் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பாரதி மற்றும் வாலாஜா சாலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.