தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் முன்னிலையிலேயே ‘சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்’ என மீண்டும் ஆவேசமாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மக்களைப் பிரிக்கும் சனாதனம் வேரறுக்கப்பட வேண்டும் என உதயநிதி ஒரு பக்கம் முழங்க, இன்னொரு பக்கம் அவரது தாயார் துர்கா ஸ்டாலின் கர்நாடகாவிலுள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் துர்கா ஸ்டாலின் மேற்கொண்ட இந்தப் பயணத்தில், அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
Son wants Sanatana Dharma eradicated. Mother worships the deity whose pran pratishtha was done by Adi Sankara the greatest exponent of Sanatana Dharma. How can the son who couldn’t eradicate sanatana dharma from his own home eradicate it from Tamil Nadu https://t.co/5KfzPiVXks
— S Gurumurthy (@sgurumurthy) May 12, 2026
ஒருபுறம் மகன் சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசி வரும் நிலையில், மறுபுறம் தாய் தீவிர ஆன்மீக ஈடுபாட்டுடன் கோயில்களுக்குச் செல்வது முரண்பாடாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கொள்கை ரீதியாக உதயநிதி உறுதியாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களின் ஆன்மீகப் பயணம் தற்போது அவருக்குப் புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
