மருத்துவத்துறைக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் முதன்மையானது அமெரிக்காவாகும். இங்கு தனியார்  சுகாதாரத் துறை அமைப்பாக விளங்குவது யுனைடெட் ஹெல்த் கேர். இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாகி (CEO) பிரைன் தாம்சன்(50). கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து யுனைட்டட் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் அதன் குழுமத்தின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஹில்டன் மிட்டன் ஹோட்டலுக்கு நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தினத்தை கொண்டாட தாம்சன் சென்றுள்ளார். இந்த விழாவை முடித்து விட்டு ஹோட்டலுக்கு வெளியே வந்த தாம்சனை மர்ம நபர் ஒருவர் சுட்டு கொலை செய்தார்.

தாம்சன் உடலில் இருந்த குண்டுகளில் “deny,refend,depose” என எழுதப்பட்டிருந்தது. இந்த கொலை குறித்த விசாரணையில் எம். பி.ஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று இன்ஜினியரிங் பட்டதாரி லூயி மான்சியோன் என்ற இளைஞரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து முன்னதாகவே இவரது  படங்களை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர். அதன் பேரில் மெக்டொனால்ட்ஸ் உணவு ஊழியர் ஒருவர் இவரை அடையாளம் கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

அந்தத் தகவலின் படி லூயி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து இரண்டு பக்க அறிக்கை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் மருத்துவ துறை நோயாளிகளின் உடல் நலனை விட லாபத்தையே முக்கியத்துவமாக கருதுகிறது. கார்ப்பரேட் அமெரிக்காவிற்கு எதிராக எனவும், இதை வன்முறையால் தான் சரி செய்ய முடியும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இதுதான் சரியான முடிவு என எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கொலையை அவரே தனியாக செயல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.