ஓடும் ரயிலில் சக பயணிகளுக்கு மத்தியில் தனது பெண் தோழியுடன் இளைஞர் ஒருவர் உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம், பொது இடங்களில் இன்றைய தலைமுறையினர் நடந்து கொள்ளும் விதம் குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரயிலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் போர்வை போர்த்திக்கொண்டு இவர்கள் செய்த லீலைகளைக் கண்ட சக பயணிகள், ஆத்திரமடைந்து அவர்களின் போர்வையைப் பிடுங்கினர். அப்போது அந்த இளைஞர் எவ்வித ஆடையும் இன்றி நிர்வாணமாக இருந்தது தெரியவந்தது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பயணிகள், அவருக்கு ஆடை அணியக் கூட அவகாசம் கொடுக்காமல், அதே நிலையில் அடுத்த ரயில் நிலையத்தில் நிர்வாணமாகக் கீழே இறக்கிவிட்டு சரமாரியாகக் கேள்வி கேட்டனர். அந்தப் பெண் மேலே இருந்த துணியை வீசி அந்த இளைஞரைக் காப்பாற்ற முயன்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் இன்றைய இளைஞர்கள் செயல்படுவதாகக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “சிறுவர்களும் குடும்பங்களும் பயணிக்கும் பொதுப் போக்குவரத்தில் இத்தகைய அருவருப்பான செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம்” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரின் இத்தகைய அநாகரீகச் செயல்கள் மற்ற பயணிகளுக்குப் பெரும் சங்கடத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. எனவே, பொது இடங்களில் ஒழுக்கக் கேடாக நடப்பவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.<

/p>