
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்ரேஷன் சிந்துர் என்ற தாக்குதலை மேற்கொண்டது. இதன் காரணமாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததோடு பாகிஸ்தானில் உள்ள பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக போர் நடந்த நிலையில் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக கணவனை இழந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை நினைவு கூறும் விதமாக ஒரே நாளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு முன்பாக ஏற்கனவே சிந்துரி என்று முதன்முதலாக ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைத்திருந்த நிலையில் கடந்த 10-ம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷி நகர் மருத்துவ கல்லூரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என்று ஒரே மாதிரியான பெயரை வைத்துள்ளனர். இந்த தகவலை அந்த மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.