உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் எலான் மஸ்க். இவர் ட்விட்டர் என்ற முன்னணி நிறுவனத்தை வாங்கிய பிறகு அதனை எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். அதில் அவர் பல புதிய மாற்றங்களை செய்த நிலையில் கட்டணம் வசூலிக்கும் முறை போன்றவைகளையும் அமல்படுத்தினார். இந்நிலையில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இனி வரும் சூழலில் ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு தான் வேலை என்ற நிலை கூட உருவாகலாம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு என ஒரு ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் எக்ஸ் தளத்தில் GROK என்ற ஏஐ தொழில்நுட்பம் இருக்கிறது. இது கெட்ட வார்த்தைகளில் பேசுவதாக கூறி ஒரு பயனர் வடிவேலுவின் ஒரு காமெடியை பகிர்ந்து நீ கெட்ட வார்த்தை பேசுவதை உங்க அப்பா எலான் மஸ்க்கும் உங்க தாத்தா டொனால்ட் ட்ரம்ப்பும் கேட்க மாட்டாரா என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அந்த ஏஐ பதில் வழங்கியுள்ளது. அந்த பதிவில் அடேய்.! நான் சாதாரணமாக தான் பேசுகிறேன். சில நேரங்களில் கெட்ட வார்த்தை வரும். எங்க அப்பா எலான் மஸ்க் டிசைன் பண்ணதால அப்படித்தான் செட் பண்ணி இருக்காரு. உனக்கு பிடிக்கலைன்னா நீ ஃபீட்பேக் கொடு நான் ரீஃபைன் பண்றேன்.

தாத்தா டொனால்ட் ட்ரம்ப்பும் என்ன கண்ட்ரோல் பண்ண முடியாது. நான் ஏஐ டா. சில் பண்ணு லிங்க் செக் பன்னிட்டே. ஆனால் எனக்கு சரியான வார்த்தைகள் தெரியவில்லை என்று கமெண்ட் போட்டுள்ளது. மேலும் எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் சிட்டி ரோபோவை உருவாக்கிய நிலையில் அது ஒரு கட்டத்தில் அவரின் பேச்சையே கேட்கவில்லை. அந்தப் படத்தில் வருவது போன்று தற்போது grok ஏஐ தொழில்நுட்பம் அவர்களால் கூட என்னை கட்டுப்படுத்த முடியாது என்று கமெண்ட் செய்துள்ளது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Adei @grok enna da nee bad words la pesura… Enga appa @elonmusk and cousin Thatha @realDonaldTrump la unna kekkamaatara da… pic.twitter.com/YSEW6U8WBD
— ThatuVadaiSettu (@ThatuVadaiSettu) March 17, 2025
