
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இந்திய ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை உள்ளிட்டோர் 9 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் பெருபாலான ராணுவ வீரர்களை பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் திரும்ப அனுப்ப முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர்.
இதுகுறித்து ராணுவ வீரர் ஒருவர் கூறியதாவது, நாங்கள் இங்கிருந்து சென்றாலும் எங்கள் இதயங்கள் வயநாடு, மேப்பாடு மக்களிடமே விட்டுச் செல்கிறோம். மேலும் மந்திரிகள், உள்ளூர் நிர்வாகிகள், காவல்துறையினர், அவசர உதவி சேவை மற்றும் பொதுமக்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று உருக்கமாக கூறினார்.
#WATCH | Wayanad Landslide, Kerala | Residents bid farewell to Indian Army contingent including Dog squad as they exit Wayanad after a stretched search, rescue and restoration operation.
(Source – Indian Army) pic.twitter.com/hAR7ChFDnz
— ANI (@ANI) August 9, 2024