சத்தீஸ்கார் மாநிலத்தில் உள்ள பில்சாபூர் மாவட்டத்தில் ஒரு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென பாம்பு ஒன்று அங்கு வந்தது. உடனடியாக ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பயிற்சி பெற்ற இளம்பெண் அஜிதா பாண்டே சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து பாம்பு இருக்கும் இடத்தை கேட்டு தெரிந்து கொண்ட அவர், பதுங்கியிருந்த பாம்பை கைகளால் பிடித்தார். பின் அதை சாக்கு பையில் எடுத்து  போட்டார். இதுகுறித்து அஜிதா பாண்டே கூறியதாவது, இது விஷமற்றது. எலி மற்றும் பூச்சிகளைப் பிடிக்க இங்கு வந்து இருக்கலாம், யாரும் பயப்பட வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அப்போது ஊழியர் ஒருவர் உங்களை பாம்பு கடிக்க முயற்சிக்கவில்லையா என்று கேள்வி கேட்டார்.  அதற்கு அவர் இல்லை “நீங்கள் அதை தொந்தரவு செய்யாததால், அது மிகவும் அமைதியாக உள்ளது” என சிரித்த முகத்துடன் பதில் அளித்தார். இந்த துணிச்சலான செயலை கண்ட ஊழியர்கள் எல்லோரும் அஜித் பாண்டேவுக்கு கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களின் பரவி வைரலாகி வருகிறது மற்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.