உக்ரைன்  நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உள்துறை மந்திரி பலியானதால் தற்காலிக உள்துறை மந்திரியாக உக்ரைன்  தேசிய போலீஸ் படையின் தலைவர் இஹோர் கிளைமென்கோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன்  அதிபர் ஜெலன்ஸ்கி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் சந்திப்பை நடத்தியுள்ளார். இதனையடுத்து தலைநகர் கீவ்வில் நடந்த விபத்தில் கொல்லப்பட்ட ஏழு பேரின் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் பேசியுள்ளார். கீவ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவியும் உக்ரைனின்  நீலம் மற்றும் மஞ்சள் கொடிகளினால் மூடப்பட்ட சவப்பெட்டிகளில் ஒவ்வொன்றிலும் பூக்களை வைத்துள்ளனர். அதன் பின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் ஜெனெஸ்கி உரையாடியுள்ளார். முன்னதாக விபத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் நாடு போரில் இருப்பதால் இது நடந்தது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.