உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி வருகின்ற நிலையிலும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த நிலையும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்  ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா முக்கிய பங்காற்றி வருகிறது.

அதிலும் குறிப்பாக அமெரிக்கா பல மில்லியன் மதிப்புள்ள ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக நோட்டா நாடுகளும் உதவிக்கரம் நீதி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா கூறியதாவது, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்ற காரணத்தினால் உக்ரைன் மக்களின் துன்பம் மட்டுமே நீடிக்கும். ஆனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என கருத்து தெரிவித்துள்ளது.