இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பணியிடங்களுக்கான  அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு வருகிற 21 -ஆம் தேதிக்குள் தகுதியும் ஆர்வமும் இருப்பவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி:INDIAN FOREST SERVICE EXAMINATION

காலியிடங்கள்: 150

தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், உயிரியல், வேதியியல், விலங்கியல், கணிதம், தாவரவியல், புள்ளியல், விவசாயம், இயற்பியல், வனம் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.8.2023 அடிப்படையில் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை தேர்வு நேர்முகத்தேர்வு மற்றும் முதன்மை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

முதல் நிலை தேர்வு மையம்: மதுரை, கோவை, சென்னை, திருச்சி, வேலூர்.

முதன்மை தேர்வு: தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 பெண்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.2.2023.

மேலும் விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.