இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டது. மேலும் ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாய் பரவின. மேலும் மன்னர் சார்லஸ் குறித்த போலி புகைப்படங்களையும் ரஷ்ய ஊடகங்கள் இணைத்து வெளியிட்டன. இதையடுத்து, தஜிகிஸ்தானில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என தெரிவித்துள்ளது. மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.