பிரபல யூடியூப் சேனல் ஒன்று, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று வயதான பாட்டி ஒருவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாட்டி, “எனது கணவர் இறப்பதற்கு முன்பு என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டுச் சென்றுவிட்டார். எந்தச் சூழ்நிலை வந்தாலும் உதயசூரியன் சின்னத்திற்குத்தான் (தி.மு.க) வாக்களிக்க வேண்டும் என்பதே அந்தச் சத்தியம்,” என்று பதிலளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்தக் குடும்பம் ஏன் தி.மு.க.விற்கு இவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அளித்த விளக்கம் தான் சர்ச்சைக்கு வித்திட்டது.
தி.மு.க.விற்கு ஆதரவளிப்பதற்கான காரணம் குறித்துக் கேட்கப்பட்டபோது, “அறிஞர் அண்ணா முதலியார், நாங்களும் முதலியார் ஜாதிதான். அதனால், காலங்காலமாக முதலியார் ஜாதிக்காகவே நாங்கள் தி.மு.க.விற்கு வாக்களித்து வருகிறோம். இனியும் அதே காரணத்திற்காக வாக்களிப்போம்,” என்று அந்தப் பாட்டி வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். பொதுவெளியில் ஒரு அரசியல் கட்சிக்கு வாக்களிப்பதற்கான காரணமாக சாதியை அவர் குறிப்பிட்ட இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கான ஆதரவானது கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, சாதி அடிப்படையில் இருப்பது சரியல்ல என்று இணையவாசிகள் மத்தியில் இது குறித்துக் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
View this post on Instagram
