
சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் ரிலீசான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அமரன் திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தி என்பவரை சிவகார்த்திகேயன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தையும் அன்பாக கவனித்துக் கொள்கிறார். இந்த நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவி ஆர்த்திக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமரன் திரைப்படத்தின் சூட்டிங் சமயத்தில் முகுந்து வரதராஜன் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் சமையல் கட்டில் சமைத்துக் கொண்டு இருந்த ஆர்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram