
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது விஜய் சேதுபதி ஐம்பதாவது திரைப்படம். மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர். கடந்த நவம்பர் மாதம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு மகாராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது.
சீனாவில் மகாராஜா திரைப்படம் 91.55 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. ஆமீர்கானின் 3 இடியட்ஸ், தங்கல் ஆகிய படங்கள் சீனாவில் அதிகம் வசூலித்த இந்திய படங்கள் ஆகும். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் சீனாவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.