
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் தனுஷ். இவர் தற்போது ராயன் என்னும் படத்தை எழுதி, நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த மாதம் 26 ம் தேதி வெளிவந்த நிலையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், அபர்ணா பாலாமுரளி, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது இந்த படம் ரூ. 116 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை நடிகர் தனுஷ் நடித்து வெளியான படங்களில் ராயன் படம் மட்டுமே அதிக வசூல் சாதனையை பெற்றுள்ளது.
இந்த திரைக்கதையை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் ராயன் திரைப்படம் 2024ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்து முதலிடத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Raayan creating Box Office records ! 💥#Raayan ranagalam everywhere 🔥#RaayanMegaBlockbuster in cinemas near you! @dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop… pic.twitter.com/PQwuYFWC5e
— Sun Pictures (@sunpictures) August 4, 2024