இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,120.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 உயர்ந்து ரூ.2,268க்கும் விற்பனை உ செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 3 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறையும். அதற்கு மேல் விலை அதிகரிக்க காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. ரூ. 500க்கு மேல் உள்ள எந்தவொரு விலையும் பணவீக்கம் மற்றும் ஜிடிபி வளர்ச்சிக்கு தீங்கு ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.