ஹேய்..! கேமரா இங்க இருக்கு…. நீ என்ன குறுக்க நிக்குற… போ அங்குட்டு என சொல்லுவாரு…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பிரதமர் மோடி வருகையில் கோ பேக் மோடி என எதிராக எதுவும் பேச கூடாது என அதைக் கேட்டால்…  நாம் அறிக்கை கொடுத்ததற்கு மறு பதில் கொடுக்கிறார்கள். அது புரோட்டாக்கால்  என்று….

அது என்ன புரோட்டாகால், ஆட்டுக்கால் எல்லாம் வருது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும்போது பிரதமர் வரும்போது கோ பேக் மோடி என்று நீங்கள் சொன்னீர்கள் அவருக்கு புரோட்டாக்கள் இல்லையா ? பிரதமர் வரும்போது பாதுகாப்பது…

கோ பேக் போடி அப்போ…  ஆட்சி வந்த போது வெல்கம் மோடி…  கேட்டால் எங்களுடைய விருந்தாளி,  முதலில் பகையாளி பிறகு பங்காளி,  பிறகு விருந்தாளி,  பிறகு கூட்டாளி, ஓட்டு போட்ட மக்கள் நாங்கள் ஏமாளி.. பிரதமர் இப்படி உட்கார்ந்து இருக்கிறார். நம் ஆட்கள் கும்பிடுகிறார்கள்.  அவர் எவரையும் மதிப்பதில்லை என்று பார்ப்பதில்லை. அது குடியரசு  தலைவராக இருந்தாலும் சரி…  யாராக இருந்தாலும் சரி யாரையும் பார்ப்பதில்லை…

கேமராவை மறைத்தாள் கவனிப்பார். அவ IASயா இருக்கான், IPSயா இருக்கான், RAWவா இருக்கான் எவனாக இருந்தாலும் மதிக்கமாட்டார். கேமரா இங்க இருக்கு, நீ என்ன குறுக்க வந்து நின்னுட்டு இருக்க போ என சொல்லி, அவன் வேலையை விட்டே போய்ட்டாரன் என பிரதமரை விமர்சித்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *