தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஐந்து கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணி புரியும் 225 ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு கீழ் உள்ள 3 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, தென்காசி குற்றாலத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி கல்லூரி மற்றும் பள்ளிகளின் 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த தொகுப்பூதிய உயர்வினால் நிர்வாகத்திற்கு இந்த வருடம் ரூ. 2.72 கொடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.