தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரிண்டர் உடன் கூடிய கைரேகை பதிவு செய்யும் கருவிகள் உள்ளது. இந்த நிலையில் பெஞ்சல் புயலால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.

ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுவதால் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விரல் ரேகை சரி பார்த்து ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும் விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும் இனி கவலைப்பட தேவையில்லை. கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல் கார்டு ஸ்கேன் செய்து பொருட்களை விரைவாக வழங்குமாறு உணவுத்துறை ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.