ஹேப்பி நியூஸ்…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இன்று (மார்ச் 23) மாவீரர்கள் தினத்தையொட்டி, பொது விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அம்மாநில சட்டப்பேரவையில் பேசியதாவது, சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் லாகூர் மத்திய சிறையில் கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

எனவே இவர்களது நினைவு நாள் ‘மாவீரர்கள் தினம்’ என அழைக்கப்படுகிறது. எனவே இந்த மாவீரர்கள் தினத்தையொட்டி, இன்று (மார்ச் 23)ஆம் தேதி பொது விடுமுறை  அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். இதையடுத்து பகத் சிங்கின் சொந்த கிராமமான  கட்கர்காலன் என்ற கிராமத்திற்கு நேரில் சென்று, அவருக்கு மரியாதை செலுத்துமாறு பஞ்சாப் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், சட்டமேதை அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் சிலைகள் சட்டபேரவை வளாகத்தில் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மார்ச் 23 ஆம் தேதியான இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.