ஹேக்கர்களுக்கு போட்டி…. அதுவும் 1 லட்சம் பரிசுத்தொகை காத்திருக்கு…. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை காவல் துறையானது 8 தலைப்புகளின் கீழ் ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பரிசை பெறும் அணிக்கு ரூபாய்.50,000, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30,000, 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய்.20,000 என வழங்கப்படும். தினசரி அதிகரித்து வரக்கூடிய குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பது சிசிடிவி காட்சிகள் தான். அவ்வாறு கிடைக்கும் சிசிடிவி காட்சிகளில் பல்வேறு நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக போதிய ஆதாரம் இல்லாமல் குற்றவாளிகள் தப்பித்து வரும் நிலை ஏற்படுகிறது. இக்குறைபாடுகளை தடுக்கும் வகையில் சென்னை காவல் துறை, ஹேக்கர்கள் என கூறப்படும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது.

2 கட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டியில் 3 பேர் கொண்ட குழுவாக பங்குபெறலாம். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் வருகிற நவ.30ம் தேதிக்குள் முன் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதற்கட்ட போட்டி டிச. 3ம் தேதி துவங்கி 6ஆம் தேதிவரை இணையதளம் வழியே நடத்தப்படும். அவற்றில் தகுதிபெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவர். 2ஆம் கட்ட போட்டியானது வரும் டிச..12ம் தேதியன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.