ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம்…. ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விபத்து நடந்த இடத்தை இராணுவத்தினரும், காவல்துறையினரும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழையாதவாறு சீல் வைத்தனர்.

இந்நிலையில் ஹெலிகாப்டரின் எஞ்சின் போன்ற ராட்சத பாகங்கள் எலக்ட்ரிக் ரோப் மூலம் சூலூர் விமானப்படை தளத்துக்கு முழுமையாக கொண்டு செல்லப்பட்டதால் ராணுவத்தினர் நஞ்சப்பசத்திரம் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் விபத்து நடந்த இடத்தை ஆர்வமுடன் பார்த்து செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *