ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிபர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் உடல், பாதுகாப்பு அமைச்சரின் உடல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உடல் என அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டதாக தற்போது அரசு அறிவித்துள்ளது.

அதன்படி விபத்து நடந்த அர்பைஜான் பகுதியை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.