புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியானது நான்கு பிராந்தியங்களாக உள்ளன. இந்த தொகுதிளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய கால விரயமும் ஏற்படுவதாக கூறியிருக்கிறார். இதனால், நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு, கட்சி தலைமை அவருக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளது. இதன் மூலம் அனைத்து பிராந்தியங்களுக்கும் விரைவாக சென்று தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.