சென்னை சிறப்பு நீதிமன்றம் ஹெச். ராஜாவின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. 2018 ஆம் ஆண்டு திமுக எம்பி கனிமொழிக்கு எதிராகவும் பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இது தொடர்பாக ஹெச்.ராஜா மீது இரண்டு வழக்கு பதியப்பட்டது.

அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தலா 6 மாதம் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. அந்த இரு பதிவுகளும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தான் வெளியானது என நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில் மேல்முறையீடு செய்ய ஹெச்.ராஜா தரப்பில் கோரிக்கை வைத்ததை ஏற்று தண்டனையை 30 நாட்களுக்கு நீதிபதி நிறுத்தி வைத்துள்ளார்.