“ஹெச் ஏ எல் நிறுவனம் வடிவமைத்துள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர்”.. நாட்டிற்கு அர்ப்பணிப்பு… அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…?

பிரச்சந்த் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு விண்வெளி தாக்குதல்களை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்திலிருந்து உடனடியாக தரையிறங்கி கணிசமான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை மீண்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக கிளம்பக்கூடிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இவைதான். மேலும் உலகில் இத்தகைய வடிவமைப்புடன் உள்ள ஹெலிகாப்டர்கள் இது மட்டுமே 20 எம்எம் டியுரெட் துப்பாக்கிகள்,70 எம் எம் ஏவுகணை பயன்படுத்தும் வண்ணம் இதன் ஆயுத அமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும் 5.8 டன் எடையுடைய இந்த இலகு  ரக ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் தாக்குதல்களை தாங்கும் விதமாகவும் இரவு நேரங்களில் மிகவும் துல்லியமான தாக்குதல்கள் நடத்தும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்  ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை எச் ஏ எல் நிறுவனம் உருவாக்கியுள்ளது இந்த விமானம் தேடுதல் பணி, மீட்பு பணி, டேங்கர் அழைப்பு, தரைப்படை தாக்குதல் என பல முக்கியமான பணிகளை மேற்கொள்கின்றது. மேலும் இவை இரண்டு என்ஜின்கள் மூலம் அதிக திறனுடன் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எதிரிகளின்  போரலிருந்து தப்பிக்கும் விதமாக கவுண்டர் மெசர் டிஸ்பெண்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது எதிரி நாடுகளிடம் விண்வெளியை கடந்து தாக்குதல் மேற்கொள்ள முடிகிறது.

அதிலும் அதிகபட்சமாக மணிக்கு 228 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற இந்த விமானம் தொடர்ந்து மூன்று மணி நேரம் பறக்கும் விதமாகவும் தரையில் இருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 15   ரக போர் விமானங்களை வாங்க ஒப்புதல் வழங்க ப்பட்டது. இந்த நிலையில் சுமார் 3 ஆயிரத்து 887 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் 10 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கும் ஐந்து ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விமான படைகளுக்கு ஹெலிகாப்டர் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வரும் பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராணுவத்திற்கு ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படுகின்றது.