இந்திய அணி தோல்விக்கு கே.எல் ராகுல் கேட்சை தவறவிட்டதே காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல் ராகுல் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 73(70) ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்விக்கு கே.எல் ராகுல் கேட்சை தவறவிட்டதே காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது 39.3 ஓவரில் 136 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தது. எனவே இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நினைத்த நேரத்தில் கடைசி விக்கெட்டுக்கு முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்ததால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கையை விட்டு நழுவி சென்று கொண்டிருந்தது.
அப்போது 43 வது ஓவரை ஷர்துல் தாகூர் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஹசன் தூக்கி அடிக்க மேலே சென்ற பந்து நேராக பின்னால் கீப்பருக்கு சென்றது. அதனை கே எல் ராகுல் வேகமாக ஓடி பிடிக்க சென்றார். ஆனால் அவர் கையில் பட்டு பந்து கீழே விழுந்தது. இதனால் ஆட்டம் மாறியது. அதன்பின் எந்தவித வாய்ப்பும் கொடுக்காமல் அவர்கள் இருவரும் வங்கதேச அணியை வெற்றி பெறச் செய்தனர்..
இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு மட்டும் 51 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது. வங்கதேச அணிக்கு எதிராக முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா மீதும் கேட்சை கோட்டை விட்ட ராகுல் மீதும் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே சமயம் டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில், சில ரசிகர்கள் ராகுல் 73 ரன்கள் அடிக்கவில்லை என்றால் இந்திய அணி 186 ரன்கள் கூட அடித்திருக்காது எனவும் அவருக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
#INDvsBangladesh KL Rahul in today's match pic.twitter.com/Vy6kOnZ6RE
— Nishant 🇮🇳 (@nishantppathak) December 4, 2022
Its Not KL Rahul's complete mistake, as he keeps the wicket after an year.
Agree or Not….??? pic.twitter.com/MfY3h12AN7
— Yash Saraiya (@YashSaraiya19) December 4, 2022
I really feel bad for Kl Rahul fans . Kl fans were having a tough time since a long long time .
Today they got to enjoy after his batting but at the end again Kela Rahul gaali kha rha hai 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/3w6Aiq4SHx— Fr🅾️nt F🅾️🅾️t 🦶🏏 (@frontfoot73) December 4, 2022
Today KL Rahul :
scored much needed runs for team india when other batters were struggling.
And then dropped most important match winning catch and we lost there.
Is he hero or villain.. confused 😓
but what a match 🇮🇳🔥#INDvsBangladesh #KLRahul pic.twitter.com/B8REjMHbFs— Akshay Pattar (@akshay_aap) December 4, 2022
KL Rahul
In Today's match
😆😜😆🤣#INDvsBangladesh pic.twitter.com/iKIJJIz3fU— Nil hindu 3693 (@nilhindu07) December 4, 2022