ஹாஸ்பிட்டலுக்கு கம்மியா வாறாங்க..! இது தான் கரெக்ட்டான நடைமுறை… – அமைச்சர் மா.சு விளக்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை 178 மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 15 மண்டலங்களிலும் இந்த மருத்துவ பரிசோதனையும், மருத்துவ ஆய்வை  செய்து கொண்டிருக்கின்றனர். 22,000க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கிங் இன்ஸ்டியுட்  மருத்துமனையில் கூட 850 பேரை சேர்க்கலாம். ஆனால் இப்போது வரை இதுல 230 பேர் என்கின்ற அளவில் தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

தொற்று இருப்பவர்கள் வீடுகளின் தனிமைப்படுத்தி கொள்ள முடியாது அதற்கான வசதி இல்லை, ஒரே அறை இருக்கிறது, வீட்டில் 7, 8 பேர் இருக்கிறார்கள். என் மூலம் மற்றவருக்கும் தொற்று பரவிவிடும் என்ற அச்சம் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அவ்வாறு வருபவர்கள் தான் மருத்துவமனையில் கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுபோன்று மருத்துவமனைகளுக்கு வருகின்றவர்களுக்கு பாதிப்பு ஏதாவது இருக்க வேண்டும். தொடர் காய்ச்சல், தொடர் தொண்டை வலி, இருமல் போன்ற தொடர் உபாதைகள், நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல் இதுபோன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். அவர்களை இப்போது மருத்துவமனைகளை பார்த்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே தொற்றின் எண்ணிக்கை வேகமாக இருந்து கொண்டிருந்தாலும், மருத்துவமனைக்கு வருவது என்பது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது சரியான நடைமுறை என்று கருதுகிறோம், உலகம் முழுவதும் இதைத்தான் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே நாம் இந்த பல்சர்சாஸ் மீட்டர் கொடுத்து விர்ச்சுவல் மானிடரிங் செய்யப்படுகின்ற இந்த முறையை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னாடியே பிரிட்டன் போன்ற நாடுகளில் தொடங்கி இருக்கிறது. எனவே உலகம் முழுவதும் இந்த நடைமுறையை தான் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *