ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம்.

இந்த படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களிலும், இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பீம் படம் பிரபல ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.

கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான தி ஷாவ்ஷாங் என்கிற ஹாலிவுட் படம் ரேட்டிங்கில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது 9.8 ரேட்டிங் பெற்று ஜெய் பீம் படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *