ஹாலிவுட் படத்தின் சாயலில் இருக்கிறது… ராம்குமாரின் கதையை மாற்ற சொன்ன தனுஷ்…!!!

ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வகையில் ராட்சசன் படத்தை இயக்கி பிரபலமடைந்த ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ராம்குமார் தனுஷிடம் படத்தின் கதையை கூறியிருக்கிறார். ஆனால் கதையை கேட்ட தனுஷ் அது ஒரு ஹாலிவுட் படத்தின் சாயலில் இருப்பதாக இயக்குனரிடம் கூறியுள்ளார். மேலும் ராம்குமார் கூறிய கதையை தனுஷ் தன்னுடன் பணியாற்றும் சினிமா பிரபலங்களிடம் கூறி, இந்த கதையை எந்த படத்திலாவது பார்த்த மாதிரி இருக்கிறதா என கேட்டு வந்துள்ளார்.

Dhanush's next with Ram Kumar will start rolling only from June 2021?

அதை கண்டறிந்ததும் ராம்குமாரிடம், நீங்கள் சொன்ன கதை இந்த  படத்தின் சாயலில் இருக்கிறது, இதனால் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் என தனுஷ் கூறியுள்ளார். 3 வருடமாக எழுதி வந்த கதையை தனுஷ் மாற்ற சொன்னதால் ராம்குமார் வருத்தமடைந்துள்ளார். தற்போது தனுஷ் பான் இந்தியாவாக பல படங்களில் நடித்து வருகிறார். வேறொரு படத்தின் சாயலில் இருக்கும் கதையில் நடித்தால் தனக்கு வரவேற்பு இருக்காது என்பதால் தான் தனுஷ் ராம்குமாரின் கதையில் மாற்றங்கள் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் ராம்குமாருக்கு கதையில் மாற்றங்கள் செய்ய விருப்பம் இல்லையாம். எனவே சிவகார்த்திகேயனிடம் இந்த படத்தின் கதையை கூறியுள்ளதாகவும், விரைவில் ராம்குமார், சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் எனவும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *