2023 ஆம் வருடத்தின் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் நடைபெற உள்ளது. பதினைந்தாவது ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக 2018 ஆம் வருடம் 14 வது ஹாக்கி உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. தற்போது பெர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சர்வதேச ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்  பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் வளாகத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்தபின், ஹாக்கி உலகக்கோப்பையில் இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்ற  அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.