ஹரி-மேகன் குழந்தையின் நிறம் என்ன…? விமர்சனம் செய்த ராஜ குடும்ப உறுப்பினர்…? வெளியான தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவி தன் குழந்தையின் நிறம் குறித்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் விமர்சனம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஒபேரா பேட்டியின்போது ராஜ குடும்பத்தின் உறுப்பினர் தன் குழந்தை பிறக்கும முன்னரே குழந்தையின் நிறம் குறித்து கேள்வி எழுப்பியதாக குற்றம் சாட்டினார். இதனால் ராஜ குடும்ப உறுப்பினர்களை இனவெறியர்கள்  என ஊடகவியலாளர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில்  தோல் நிறம் குறித்து குற்றம் சாட்டியது  இளவரசி ஆன் மேல் தான் என்று ராஜ குடும்ப வரலாறு புத்தகத்தை எழுதும் தொலைக்காட்சி பிரபலம் Lady Colin(71) என்ற பெண்  தெரிவித்துள்ளார்.

ஆனால் இளவரசி ஆன் மீது ஹரி மேகன் தவறாக குற்றம் சாட்டியுள்ளார் என்றும் அவர் கூறியது நிறத்தைப் பற்றி அல்ல பிரிட்டன் மக்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே உள்ள கலாச்சார வேறுபாடு என்று கூறினார். Lady Colin போன்ற ஒரு அக்கறையான உறவினர் மீது ஹரி-மேகன் குற்றம்சாட்டியுள்ளனர் என்றும் யார் மீதும் இனவெறுப்பு காட்ட முடியாது என்றும் தெரிவித்தார்.