ஹரி-மேகனின் நீண்ட நாள் ஆசை.. வரலாற்றில் இடம் பிடிப்பார்களா..? அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்..!!

பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் தங்களுக்கு பிறக்கவுள்ள இரண்டாம் குழந்தையை அமெரிக்காவில் உள்ள தங்களின் பெரிய வீட்டில் பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளனர். 

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் Monecitoவில் கடந்த வருடத்தில் சுமார் 14.5 மில்லியன் டாலர் மதிப்புடைய மிகப்பிரம்மாண்டமான வீட்டை வாங்கினர். இந்நிலையில் இரண்டாவதாக அவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தையை அந்த வீட்டில் பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதாவது அந்த குழந்தை அமெரிக்காவில் பிறக்கும் பட்சத்தில், பிரிட்டனின் அரச வாரிசு அமெரிக்காவில் பிறப்பது இதுவே முதல் முறை என்ற வரலாற்றில் இடம்பெறும். சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஓப்ராவுடன் ஹரி-மேகன் அளித்த பேட்டியில் பெண் குழந்தை தான் அவர்களுக்கு அடுத்து பிறக்கப்போவதாக தெரிவித்தனர்.

மேலும் குழந்தை வருகின்ற கோடை காலத்தில் பிறக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஹரி-மேகன் பிரிட்டனில் தாங்கள் வசித்த Frogmore Cottage என்ற வீட்டில் தங்கள் முதல் குழந்தை Archieயை பெற்றெடுக்க விரும்பினர். ஆனால் கடைசி நேரத்தில் மருத்துவர்கள் லண்டனில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுப்பது நல்லது என்று கூறிவிட்டனர். எனவே இந்த முறையாவது ஹரி-மேகன் விருப்பம் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.