ஸ்டேட்டஸ் வைப்பது தொடர்பாக தகராறு…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சோழமாதேவி கிராமத்தில் கூலி தொழிலாளியான காமராஜ்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் உடுமலையில் இருக்கும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் கீர்த்தனா அப்பகுதியில் இருக்கும் 60 அடி ஆழமுடைய கிணற்றுக்கு அருகே சென்றுள்ளார். அங்கு வைத்து தஞ்சாவூரில் வசிக்கும் உறவினரான மனோஜ் என்பவரை தொடர்பு கொண்டு நான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என தெரிவித்துள்ளார். அந்த நபர் அவ்வாறு செய்யாதே என கூறிய போதே மாணவி கிணற்றுக்குள் குதித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் உடனடியாக சோழமாதேவியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரை தொடர்பு கொண்டு கீர்த்தனாவை காப்பாற்றுமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபாகரன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கீர்த்தனாவின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போனில் ஸ்டேட்டஸ் வைப்பது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் அவரது தோழிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *