ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. மக்கள் எதிர்ப்பு….. தமிழக அரசு அனுமதிக்காது….!!!

ஆக்சிஜனை தயாரித்து மக்களுக்கு இலவசமாக தர ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு இருந்த நிலையில்,ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர். அப்போது ஸ்டெர்லைட் அனுமதி தரக்கூடாது என ஆட்சியரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், ஆலையை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆலையை திறக்க தமிழக அரசு நிச்சயமாக அனுமதிக்காது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவுள்ள நிலையில், இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.