“ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றுங்க”…. 3 மாதத்தில் வெளியாகப்போகும் உத்தரவு…..!!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலை மேலாளரான சுமதி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இருப்பதாவது “தூத்துக்குடி சிப்காட்டிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல்வேறு மூலப்பொருட்கள் இருக்கிறது. கொரோனா 2ஆம் அலையின்போது அந்த ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெய், மூலப் பொருட்கள், கழிவுகள் போன்றவற்றையும், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற அனுமதி அளிக்கும்படியும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார். இந்தமனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த ஆலையிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதே சமயத்தில் அங்குள்ள கழிவுகள், மூலப் பொருட்களை வெளியேற்றும் விவகாரத்தில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டால், அதையும் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.