“ஸ்டாலினுக்கு பாஜகவுடன் ரகசிய உறவு?”…. செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி….!!!!

திருமலை நாயக்கரின் 439-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “திமுக அமைச்சரவையில் நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 6 அமைச்சர்கள் உள்ளனர். இருப்பினும் ஒரு அமைச்சர் கூட இங்கு வந்து நாயக்கர் மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை” என்று கூறி பரபரப்பாக பேசினார்.

அதனைத தொடர்ந்து பேசிய அவர் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாததற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எனவே மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக எந்த ஒரு நிலைப்பாட்டையும் முன்னெடுக்காது என்று உறுதிபட கூறியுள்ளார். அதேபோல் உலக அரங்கில் பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை பறைசாற்றி உள்ளார் என்றும் கூறினார். பின்னர் பாஜகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உறவு இருப்பதாகவும் பரபரப்பாக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *