ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த பெண்…. தென்காசியில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மா சாலை குறிஞ்சி நகரில் ரெங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வேகமாக வந்த கார் செல்வியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *