“ஷாருக்கான், அட்லீ இணையும் திரைப்படம்”…. கதாநாயகியாக நடிக்கும் பிரபல நடிகை… அப்ப நயன்தாரா இல்லையா…????

ஷாருக்கான், அட்லீ இணையும் படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ. இவர் ஒரு சில திரைப்படங்கள் மூலமே மிகவும் பிரபலமடைந்தார். இவர் ஆர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. சாருக்கான் தற்போது ராஜ்குமார் ஹிரானி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தை முடித்தவுடன் அட்லீயுடன் இணைய இருக்கின்றாராம். இந்நிலையில் படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடிப்பதாக தற்பொழுது கூறப்பட்டு வருகின்றது. ஏற்கனவே படத்தில் நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ப்ரியாமணி நடிப்பதாக செய்திகள் வந்ததால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஒருவேளை படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கலாம் எனவும் அதில் ஒருவர் பிரியாமணி ஒருவர் நயன்தாராவாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *