தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள். இவர்களிடம் கேஸ் சிலிண்டர்களை கொண்டு சேர்க்கும் பணிகளை டெலிவரி ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தொழிலாளர்கள் நலச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,000-ஐ தீபாவளியை முன்னிட்டு போனசாக வழங்க வேண்டும் என்று சிலிண்டர் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்று அரசு விடுமுறை தினங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அரசிடம் முன் வைத்துள்ளனர். இதனை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்களுக்கு சிலிண்டர் புக் செய்யும்போது வருவதற்கு காலதாமதம் ஏற்படலாம். குறிப்பாக தீபாவளி பண்டிகையை ஒட்டி அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளதால் அன்றைய தினம் சிலிண்டர் வருவதற்கு தாமதமானல் அல்லது கிடைக்காவிடில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். மேலும் இது பொதுமக்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது